மஇகா தேசிய மகளிர் பிரிவு தலைவியின் பழிவாங்கும் படலம், அம்பலம் ஆகிவிட்டது

This was confirmed by the Wanita MIC chief Mohana Muniandy when contacted by The Malaysian Times

Confirmed by the Wanita MIC chief Mohana Muniandy when contacted by The Malaysian Times

மஇகா மகளிர் பிரிவின் மகளிர்களிடையே பதவி இராஜினாமா தகராறு என்ற செய்திக்கு, தி மலேசியன் டைம்ஸ் (THE MALAYSIAN TIMES), மஇகா கூட்டரசு பிரதேச மாநில தலைவி  திருமதி.கோகிலம் சுப்பையா பின்வருமாறு பதிலளித்தார். தான் தேசியமகளிர் பிரிவின் மகளிர் மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நிகர்நிலை இராஜினாமாஆகிவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேசிய மகளிர் பிரிவின் தலைவி திருமதி. மோகனா முனியாண்டியிடம் தி மலேசியன் டைம்ஸ்_இணைய  பத்திரிகை  (THE MALAYSIAN TIMES ONLINE NEWS PORTAL), கேட்டதற்கு அவர்  இந்த செய்தியை  உறுதி  படுத்தியிருக்கின்றார்.

இது குறித்து திருமதி. கோகிலமிடம் கேட்ட போது அவர் , தமக்கு முன்கூட்டியே தேசிய மகளிர் பிரிவிடம் இருந்து எந்த ஒரு கடிதமும் வழங்கப்படவில்லை என்றும் பத்திரிகை நிருபர்கள்  விளக்கம் கோர தமக்கு வழங்கிய அக்கடிதத்தின் நகல் மட்டுமே தம்மிடம்இருப்பதாக அவர்  தெரிவித்தார் . இருப்பினும் தேசிய மகளிர் பிரிவு தலைவி இவ்விசயத்தை தி மலேசியன் டைம்ஸ்  (THE MALAYSIAN TIMES), இடம் உறுதிபடுத்தியுள்ளார். இக்கடிதத்தின் நகல் அவர்கலிடம் கிடைத்ததை மஇகாவின்  தேசிய செயலாளரும் கூட்டரசு பிரதேச மாநில செயலாளரும் கோகிலமிடம் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் எனவே தன் மீது சுமத்த பட்டிருக்கும்  குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும் தம் தரப்பு ஞாயத்தை  விளக்கும் பொறுப்பு  தமக்கு இருப்பதாக அவர் கூறினார். கூட்டரசு பிரதேச மாநிலத்திற்கு நான் தான்  இன்னமும்  தலைவி என்றும் தம்  மாநிலபொருப்புகளையும் கடமைகளையும்  மேலும்  சரிவர செவ்வனே  செய்வேன் என்று கூறினார் .

தமக்கு எதிராக வெளியிடப்பட்ட கடிதத்தில் எந்தவொரு உண்மையும்  ஞாயமும் இல்லை  என்றும்  தமது ஆக்ககரமான முழுமாற்றத்தினை சமுதாயதிற்க்கு கொண்டு செல்வதற்கு  தடை போடும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறினார் .

தேசிய மகளிர் பிரிவின் செயளாலினி குமாரி கரம்பால் கோர் , தமக்கு விடுத்துள்ள கடிதம்  அவரின் இயலாமையை காட்டுகிறது .மேலும் அக்கடிதத்தை உறுதி படுத்தி ஒப்புதல் அளித்த தேசிய மகளிர் பிரிவின் தலைவி திருமதி.மோகனா முனியாண்டி அவர்களின் அறியாமை மிகவும் வருந்ததக்கதாக உள்ளது என்று அவர் கூறினார்.மஇகா மகளிர் பகுதி துணை விதி 2003 யை சரிவர புரிந்துகொள்ள முடியாததால் நான் மகளிர் பிரிவின் மகளிர் மன்ற கூட்டதிற்க்கு  கலந்து கொள்ளவில்லை என்பதால்கூட்டரசு பிரதேச மாநில தலைவி பதவியில் இருந்து  நிகர்நிலை இராஜினாமாஆகிவிட்டேன் என்று அறிவுபூர்வமற்ற செய்தியை வெளியிட்டு உள்ளார்கள் ,கராம்பாலும் மோகனாவும் . மாநில தலைவி பதவியும் ,மகளிர் பிரிவின் மகளிர் மன்ற உறுப்பினர் பதவியும் தனித்து இயங்கும் சுயாதீன நிர்வாக குழுக்கள் என்பதை கூட தெரிந்திராமல்  மகளிர்  பகுதி  துணை விதி 53-யை பயன்படுத்திய  தேசிய மகளிர்பிரிவின்  தலைவியின் செயல்பாடு  நகைப்பிற்குறிய  செயலாகும் .அவர்களின் இச்செயல் தேசிய  தலைவியின் தலைமைதுவ  திறனை பார்த்து  கேள்வி எழுப்பும்வகையில் உள்ளது.

மஇகா மகளிர் பகுதி துணை விதிகள் 2003( துணை விதி 53,பக்கம் 30) கீழ் கண்ட வாரு :

நிர்வாகக் குழுக் கூடத்தின் வருகையாளர்கள்

தொடர்ந்து மூன்று (3)  கூட்டங்களுக்கு தகுந்த விளக்கமி ன்றி வருகை தராத எந்தவொரு  உருப்பிணரும் சம்பந்தப்பட்ட குழுவிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும்.

கூட்டரசு பிரதேச மாநில மகளிர் பிரிவு மேலும் சிறப்பாக செயல்பட வகை செய்யும்படியாக கட்சியின் சட்ட விதிக்கு உட்பட்டு ஆக்ககரமான முழுமாற்றத்தினை நோக்கி ஏகமானதாக,  சம்பந்தப்பட்ட ஐந்து (5) தொகுதி தலைவிகள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பதிலாக,  என்னை பழிவாங்கும் எண்ணத்தில் தேசிய தலைவி இச்செயலில் இறங்கி இருக்கிறார். மாநில தலைவிகளோடு இணைந்து செவையாற்ற மறுக்கும் சில பொறுப்பற்ற தொகுதி  தலைவிகளுக்கு ஆதரவு வழங்குவதை தேசிய தலைவி தவிர்க்க வேண்டும் என்று திருமதி. கோகிலம் சுப்பையா கூறினார்.

தேசிய தலைவியோடு பலமுறை சம்பந்தப்பட்ட தொகுதி தலைவிகளிடம் இருக்கும் வேற்றுமையை அகற்றி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்த முயற்சிக்கு அவர்  செவிசாய்க்கவில்லை. ஒரு தலை பச்சமாக அவர் செயல்படுவது அவரின்  முதிர்ச்சியற்ற தலைமைதுவத்தை காட்டுகிறது .கட்சி மகளிர்களிடையே ஒற்றுமை மேலோங்கவேண்டும் என்று ஒவ்வொரு மேடைகளில் முழுக்கமிட்டல் மட்டும் போதாது,அவரின்நடவடிக்கைகளிலும்அது இருக்க வேண்டும் .அடுத்து,  அந்த நகல் கடிதத்தில் குறிபிட்டதாவது :

“ நான் தொடர்ந்து எந்தவொரு “எதிர்பாராத” காரணங்களால் முன்று (3) முறை  “ தேசிய மகளிர்  உச்சமன்ற தொடர்பு குழு”  நடத்திய கூட்டங்களுக்கு 15/3/2014, 19/4/2014 & 17/8/2014 ஆகிய   திகதிகளில்  களந்து கொள்ள தவறியதால் நான் நிகர்நிலை ராஜினாமாஆகிவிட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறது “.

முதலில் நான் இங்கு சுட்டிக்காட்டுவது என்னவென்றால் ,நான் மகளிர் பேராளர்கள் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்ட “மகளிர் மன்ற” உருப்பிணர் ஆவேன் .ஆகவே அவர்கள் கடிதத்தில்  கூறபடும் தேசிய மகளிர் தொடர்பு குழு மன்றம் என்று அழைக்கப்படுவது தவறாகும். அதோடு “எதிர் பாராத காரணங்கள் ” என்று அவர்கள் பயன் படுத்தியவார்த்தைகளும் தவறானதாகும்.  முறையாக மகளிர் பகுதி துணை விதிகள் 2003-யை படித்து புரிந்து கொண்ட  யாரேனும்  இம்மாதிரியான தவறுகளை செய்திருக்கமாட்டார்கள்.

இரண்டாவதாக நான் 19/4/2014ல் நடத்திய மகளிர் மன்ற கூட்டத்திற்க்கு வரவில்லை என்ற குற்றசாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .காரணம் அந்த திகதியில் நடைபெற்ற மகளிர் மன்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அதற்கான தகுந்தஆதாரங்களையும்  என்னால்  வழங்கமுடியும். ஆகவே நான் நிகர்நிலை ராஜினாமாஆனதாக கூறப்படும் கடிதம்  செல்ல தகாத கடிதம் ஆகும் . மேலும் 17/8/2014 ஆம் திகதியில்  நடத்தப்பட்ட மகளிர் மன்ற  அவசர கூட்டதிற்க்கு என்னால் கலந்துகொள்ள முடியாததிற்க்கு தகுந்த விளக்கம் அளிக்கும்  கடிததையும் தேசிய மகளிர் பிரிவின்செயளாலினியிடம் சமர்ப்பித்து விட்டேன்.

இறுதியாக அக்கடிதத்தில் கூறப்படிருக்கும் 17/6/2014 ஆம் திகதியில் நடை பெற்ற மகளிர் மன்ற கூட்டத்தில் ஏகமானதாக எடுக்கப்பட்ட முடிவு செல்லதகாதது ,காரணம் 17/6/2014ல் எந்த ஒரு மகளிர் மன்ற கூட்டமும் நடைபெறவில்லை. ஆகவே இது ஒரு தீய நோக்கத்துடன்  மிகவும் மோசமாக ஜோடிக்கப்பட்ட கூற்று ஆகும்.

ஆகவே இம்மாதிரியான தனிப்பட்ட தாக்குதல்களிலும் உட்பூசல்களிலும் ஈடுபடாமல் தவறுகளை எற்றுகொண்டு சமுதாய நலத்தையும், மேம்பாட்டினையும் நினைவில்கொண்டு  மகளிர் பிரிவு சேவையை ஆற்ற வேண்டும்.

“எனவே என் நற்பெயருக்கு களங்கம் விலைவிக்கும் வகையிலும் என்தலைமைதுவத்தின் மேல் தனிப்பட்ட தாக்குதலை நடத்திய தேசிய மகளிர் பிரிவின் தலைவி திருமதி. மோகனா  முனியாண்டியும் , தேசிய மகளிர் பிரிவின் செயளாலினி குமாரி. கரம்பால் கோர் இருவரும்  முறையாக பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு கடுமையாக வலியுறுத்துகிறேன்”   என்று  கோகிலம் கூறினார்.

முற்றும்

கோகிலம் சுப்பையா, K.M.N.
கூட்டரசு
 பிரதேச மாநில மகளிர் பிரிவு தலைவி .
மகளிர்
 மன்ற உருப்பிணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *